இலங்கையில் போதுமான அளவு ஒட்சிசன் கையிருப்பில் உண்டு! - சுகாதார அமைச்சு
இலங்கையில் போதுமான அளவு ஒட்சிசன் கையிருப்பில் உண்டு என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களது ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், கையிருப்பில் போதியளவு ஒட்சிசன் உண்டு என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்சிசன் தேவை காணப்படும் அனைத்து வைத்திசாலைகளுக்கும் போதியளவு ஒட்சிசனை விநியோகம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் என மக்கள் பதற்றமடைய தேவையில்லை என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பொறுப்புணர்ச்சியுடன் பின்பற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
