ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் நிகழ்ந்துள்ள சாதனை! அதிகரித்துள்ள வருமானம்
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர் மாபெரும் சாதனையொன்று நிகழ்ந்துள்ளதாக பிரதி அமைச்சர் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னர் 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைந்துள்ளன.

அதேவேளையில் உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 187ஆவது இடத்திலிருந்து இலங்கை 102 ஆவது இடத்துக்கு முன்னேறியது. இது ஏழு தசாப்தத்திற்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட மாற்றமாகும்.
மேலும் 2025 ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் 1.7 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த வருடம் எம்மீதான மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது என்பதே இன்றையமுக்கிய விடயம் ஆகும்.

அரசியல்வாதிகள் மாத்திரம் தங்களுடைய வரப்பிரசாதங்களை தவிர்ப்பதன் ஊடாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். நாம் மாறத் தயாரில்லை என்றால் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. எனவே ஒவ்வொருவரும் இந்த நாட்டின் மாற்றத்துக்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
பொருளாதார நிலை சார்ந்து அபிவிருத்தி காண வேண்டும். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உலக வங்கியின் பிரதிநிதிகள் கூட அந்த விடயங்களைக் கூறியிருந்தார்கள்.
உலகக் கிண்ண கிரிகெட் போட்டியில் பாகிஸ்தானை இணைத்துக் கொள்வதில் ஜனாதிபதியின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக நாட்டினுள் இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது. அதேபோல பிராந்தியத்திலும் அந்த சகோதரத்துவத்தை வலுப்படுத்துகின்ற அரசாங்கமாக இருந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை விருந்தரங்கத் திட்டத்திற்கு ஒப்புதல் : ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam