கலிஃபோர்னியாவில் பனிச்சரிவு: மீட்புப் பணியில் ஈடுபடும் வீரரின் துணைவியாரும் உயிரிழப்பு
கலிஃபோர்னியாவில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கப் போராடும் மீட்புக் குழுவில் உள்ள ஒருவரின் துணைவியாரும் உயிரிழந்தவர்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேஸில் பீக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் 'பிளாக்பேர்ட் மவுண்டன்' என்ற சுற்றுலா குழுவைச் சேர்ந்த 15 வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.
உயிரிழப்பு
மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், அவர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இந்த குழுவில் மொத்தம் 4 வழிகாட்டிகளும் (Guides) 11 சுற்றுலாப் பயணிகளும் இருந்தனர். உயிரிழந்த 8 பேரில் 6 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.
சுமார் 50 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் மோசமான வானிலைக்கு மத்தியிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு 6 பேரை உயிருடன் மீட்டனர். இதில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணி
உயிரிழந்தவர்களில் ஒருவர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் ஒருவரின் வாழ்க்கைத் துணைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் பலர் 'சுகர் பவுல் அகாடமி' என்ற விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட உடல்கள் இன்னும் பனியில் புதைந்துள்ளன. சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் சுமார் 3 அடி (90 செ.மீ) வரை புதிய பனி பொழிந்துள்ளதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் உடல்களை மீட்டுக் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
பனிச்சரிவு ஆபத்து இன்னும் குறையாததால் பொதுமக்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam