சுவிஸில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழரை அதிரடியாக நாடு கடத்திய அரசு
பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கையை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு தனது நண்பரின் மனைவியைத் அச்சுறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தினால் 9 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணயின் போது அதனை முற்றாக மறுத்த இலங்கையர், தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று நீதிமன்றில் தெரிவித்தார்.
வழக்கின் இறுதித் தீர்ப்பு
எனினும் இது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளன்று, அந்த நபர் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகவில்லை.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைப்பதற்கு முன்பே அவர் தலைமறைவானார்.
குற்றவாளியான இலங்கையர் இல்லாத நிலையிலேயே, நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்ததுடன், குற்றவாளியான இலங்கையரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில் பிரான்ஸில் இருந்து தப்பியோடி, சுவிஸில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam