ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமை
ஜனாதிபதி உலக நாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் நாட்டின் கடன் நிலை ஸ்தீரமடைந்துள்ளது.பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றியமையாதது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனுரவுக்கு தெளிவில்லை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது.
டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான 0.73 வீத பங்குகள் தேசிய சேமிப்பு வங்கி வசமுள்ளது. இந்த பங்குகளை திறைசேரிக்கு சொந்தமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்கு உதவும் ரணில்
நாட்டு மக்களையும், நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி உலகை வலம் வருவதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக மானியம் குறைநிரப்பு பிரேரணை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி உலக நாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் நாட்டின் கடன் நிலை ஸ்தீரமடைந்துள்ளது.
பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றியமையாதது. வெளிநாட்டு சுற்று பயணங்களுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அடிப்படையற்றது.
2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
[QQDGNAJ
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
