3 இலட்சம் ரூபாவாக உயர்வடையும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை தங்க விலை நிலவரங்களின் படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றையதினம் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
எனினும், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 1,002,963 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 283,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 259,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 247,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலையானது சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய கடுமையாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam