இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை
நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஒப்பிடுகையில் பாரிய உச்சத்தை அடைந்து வருகின்றது.
இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (17) தினத்துடன் ஒப்பிடும்போது ரூ.20,000 குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (18) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.360,800 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை
இதற்கிடையில், நேற்று (17) ரூ.410,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ.390,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



