திருமணமாகி சில மாதங்களில் விபத்தொன்றில் பலியான இளைஞன்
புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புத்தளம் திலாடிய பகுதியில் மோட்டார் சைக்கிள் அறையை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
மின்சார கம்பி
இதன்போது, அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பலூன் வேறொரு இடத்தில் அமைந்துள்ள மின்சார கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி இந்த இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்கனவே உயிரிழந்துளளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



