இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறையுமென காத்திருந்தவர்களுக்கு சோக செய்தி
இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
வரலாறு காணாத உயர்வு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்தும் தங்கத்தின் விலை குறையும் என தங்க ஆபரணம் வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு தற்போது மீண்டும் பழைய விலைக்கே தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செட்டியார்தெரு நிலவரம்
இவ்வாறான சூழலில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 188,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 174,000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது இலங்கையிலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
