பொதுமக்கள் குழப்பம் ஏற்படுத்தாதீர்! இரத்து செய்யப்படும் நடைமுறை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை - தாயும் மகளும் கைது  | 
இரத்துச் செய்யப்படும் நடைமுறை

எரிபொருள் நெருக்கடிக்கு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும், பணியாளர்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அல்லர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சில சில இடங்களில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் சில நாட்களுக்கு வீதியை இடைமறித்து, எந்தவொரு இடத்திலேனும் குழப்பநிலையை ஏற்படுத்தினால், அதாவது எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களைத் தாக்கினால், அன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
| வீதிகளில் பதிவாகும் மரணங்கள்! தீவிரமடையும் நிலை - அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்  | 
தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்

இலங்கைக்கு பெட்ரோல் மற்றும் டீசலைக் கொள்வனவு செய்ய புதிதாக 2 நிறுவனங்களும், விமான எரிபொருளை வழங்க மற்றுமொரு நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம், தற்போது நாளொன்றுக்கு 350 மெட்ரிக் டன் லீற்றர் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்படுகின்றது. அத்துடன், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும் உற்பத்தி செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
| எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam