எரிபொருள் நெருக்கடி தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நிதித் திறனை கருத்திற்கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை சிறந்த முகாமைத்துவத்துடன் வாடிக்கையாளருக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காகவே குறித்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
கியூ.ஆர் முறைமை தீர்வாகாது

எனவே எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது.
மேலும் மத்திய வங்கியின் ஊடாக எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக வரம்பு தீர்மானிக்கப்படும்.”என கூறியுள்ளார்.
மீண்டும் வரிசைகள்
இதேவேளை எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அனுமதிப்பத்திர பிரச்சினை காரணமாக சுப்பர் டீசல் எரிபொருளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் பல எரிபொருள் நிலையங்களில் மீண்டும் இன்று வரிசைகள் ஆரம்பமாகியுள்ளன.
எவ்வாறாயினும், எரிபொருளை வெளியேற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புடன் இணைந்து பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
