ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் யாழ். மக்களுக்கு எச்சரிக்கை
செயற்கையான ஒரு எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவரத்தை தோற்றுவிக்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் கடுமையான அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில், எரிபொருளுக்கு பற்றாக்குறையும் ஏற்படும் என்று கருதி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இது ஒரு செயற்கையான எரிபொருள் பற்றாக்குறை என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
போதுமானளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும், போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
