எரிபொருளுக்காக அக்கரைப்பற்றில் வரலாறு காணாத வரிசை
எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று எரிபொருள் நிலையத்தில் வரலாறு காணாத வாகனங்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகின்றது.
அக்கரைப்பற்று சந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று இராணுவமுகாமை அண்மித்து வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சிங்கள மகாவித்தியாலயத்தின் பின்பாக அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றிவரும், வீதியினை கடந்து மறுபுறத்திலுள்ள பழைய பத்திரகாளியம்மன் வீதியினையும் தாண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காண முடிந்தது.
நேற்று காலை முதல் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் உணவு சமைத்து உண்பதையும்,சிலர் பொழுது போக்காக விளையாட்டுக்களில் ஈடுபட்டு நேரத்தை கடத்துவதையும் காணமுடிந்துள்ளது.
எரிபொருளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு
இதேநேரம் ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (15) காலை முதல் டீசலை பெற்றுக்கொள்வதற்காக உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
