எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை
மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இணக்கம்

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலைய இணைப்பாளர் ஜே.இமாம்டின் முச்சக்கர வண்டிகளுக்கு நாளாந்தம் 8 லீற்றர் எரிபொருளை பெற்றுக்கொடுக்க இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri