எரிபொருள் இறக்குமதி குறித்து அரசாங்கம் முக்கிய தீர்மானம்-செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இலங்கை நேரடியாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி, நிலக்கரி, தானியவகைகள், மற்றும் உரம் ஆகியனவற்றை இறக்குமதி செய்வதிலும் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்தத்திற்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri