மற்றுமொரு உணவுப்பொருளின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 1.9 வீதத்தினால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87ஆக நிலவியது.
இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த அதிக விலை 68,000 ரூபாவாகும்.
வருமானம் உயர்வு
ஏற்கனவே அதற்கு முந்திய வாரத்தில் 1,000 தேங்காய்களுக்கு ஏலத்தில் கிடைத்த விலை 63,700ஆக நிலவியது.
இந்நிலையில் இந்த ஏலத்தின் போது 10 இலட்சத்து 18 ஆயிரத்து 186 தேங்காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதில், 7 இலட்சத்து 6 ஆயிரத்து 9 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதத்தால் அதிகரித்து அதன் வருமானம் 573 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
