வெள்ள நீரில் விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி
தற்போது பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரில் விளையாடி கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று மின்கம்பத்தின் உதவியுடன் வெள்ளத்தில் படகுகளை சவாரி செய்து கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சிங்கள பிரதேசத்தே சேர்ந்த தமித் குமார என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
வெள்ள அனர்த்தம்
மின்சாரம் தாக்கியதையடுத்து படகில் இருந்த ஏனைய இளைஞர்களும் விழுந்து போதிலும் காயமின்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் புலத்சிங்கள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சீரற்ற காலநிலை
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞருடன் படகு சவாரியில் ஈடுபட்ட ஏனைய இளைஞர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.