இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு(VIDEO)
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேரையும் எதிர்வரும் (31.10.2022) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் நேற்று (16.10.2022) கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்று (17.10.2022) காலை ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த 5 இலங்கை கடற்றொழிலாளர்களும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐவரும் நேற்று (16.10.2022) காலை கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகு ஒன்றும் இந்திய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஐவர் கைது
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் , இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால் மற்றும் சுதீஷ் சியான் ஆகிய இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐவரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட ஐவரும் தொடர்ந்து விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு
அழைத்துவரப்பட்டு அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






