தொழிலை இழக்க நேரிடும்: யாழ். பாசையூர் கடற்றொழிலாளர்கள் விசனம்!
யாழ்.பாசுயூர்- பூநகரி வரையான கடற்பகுதியில் கடற்றொழிலை வாழ்வாதாரமாக் கொண்டு தொழிலை மேற்கொள்ளும் பாசையூர் கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிப்படைவதாக ஊடகத்திற்கு விளக்கியுள்ளனர்.
அதன்படி நேற்றைய தினம் (26.03.2023) பாசையூர் கடற்றொழிலாளர்கள், பாசையூர் கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் மேற்கொள்ளும் சிறகு வலைத் தொழிற் பகுதிகளில் 'நாரா நிறுவனம்' அட்டைப் பண்ணைகளை அமைப்பவர்களுக்காக இடங்களை அடையாளப்படுத்தியுள்ளதைக் காண்பித்துள்ளனர்.
வேறு வழியில்லை
இதனால் பாசையூர் கடற்றொழிலாளர்கள் காலம் காலமாக மேற்கொள்ளும் தொழிலை இழக்க நேரிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக இயற்கையாக அட்டை கிடைக்கும் பகுதிகளில் சீன கடலட்டைகளை விளைவிப்பதற்கான பண்ணை அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அவ்வாறு மீறி அமைத்தால் கடலில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
