சீனக்கடலட்டை வேண்டாம்! கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
சீனக்கடலட்டை வேண்டாம் எனவும் இலங்கை கடலட்டை வேணும் என பாசையூர் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி, பூநகரி, கந்தலடி கடற்பிரதேசத்திலே கடல் பயணத்தினை மேற்கொண்டு கடலட்டை பிடிப்பினை கண்டித்து, கவனயீர்ப்பு வாழ்வாதார போராட்டம் ஒன்றை இன்று (26.3.23)பாசையூர் கடற்றொழிலின் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் படகில் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாசையூர் கடற்றொழிலின் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நாரா நிறுவனம்
கடந்த மூன்று தலைமுறைகளாக பாரம்பாரிய சிறகுவலைகளை மேற்கொண்டுவருகின்றனர். இலங்கையின் நாரா நிறுவனம் கடலினை சீன கடலட்டை வளர்ப்புக்கு GCF மூலமாக செய்து தடி மூலமாக அடையாளப்படுத்துகின்றனர்.
பாரம்பரிய சிறகுவலை தொழிலாளர்களுடன் எந்தொரு கலந்துரையாடலினை முன்னெடுக்கவில்லை. நாரா நிறுவனம் சர்வரீதியான அதிகார போக்கில் கடல் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இது இயற்கையாகவே கடலட்டை வளரும் பிரதேசமாக காணப்படுகின்றது. இதில் இருந்து 100சிறகுவலை கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
பூநகரி பிரதேசத்தினை சேர்ந்தாலும் குருநகர் பாசையூர் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தான் இதன் போது பாதிப்பினை சந்திக்கின்றனர். வன்னி பெரும் நிலப்பரப்பில் இருக்கின்ற எமது கடற்றொழிலாளர்களுடான ஒரு முரண்பாட்டினை மேற்கொள்ளுவதற்காகதான் இந்த நாரா நிறுவனம் செயற்பட்டு வருகின்றது என்றனர்.
பாசையூர் கடற்றொழிலாளர் சங்கத்தின் உப செயலாளர் என்.நிவாஸ், தலைவர் மதன்,
,உறுப்பினர் விஜித், யாழ். மாவட்ட முன்னாள் கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தின்
தலைவரும் ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் அ.அன்னராசா உள்ளிட்ட
கடற்றொழிலாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.









போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
