ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு
14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு நாளை (19.05.2023) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் ரணவிரு சேவா அதிகார சபையானது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய போர்வீரர் நினைவேந்தல்
நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் போர் வீரர்களை நினைவு கூரும் இந்தவிழா பெருமைக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது விசேட போர்ப்பறை இசையும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் உரைகள்
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தேசிய போர்வீரர் நினைவேந்தலில் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து பௌத்த மற்றும் பிற மத சடங்குகளும் இங்கு நடத்தப்படுவதுடன் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். இங்கு முப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டு இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர் எனதெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் உரைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
