இரண்டு IMF உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறிய இலங்கை
2023 ஏப்ரல் இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் இலங்கை 25 வீதத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் வெரைட் ஆராய்ச்சியின்படி, முக்கியமான கடமைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
முதலாவதாக, குறிப்பிடத்தக்க தகவல் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, மார்ச் மாத இறுதி வரை, மதிப்பீட்டிற்கு போதுமான தகவல்கள் கிடைக்காததால், அடையாளம் காணப்பட்ட 10வீத உறுதிப்பாடுகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது.
அத்துடன் ஏப்ரல் 2023 க்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு உறுதிமொழிகளில் இலங்கை தவறிவிட்டது. இவற்றில் முதலாவது பந்தயம் தொடர்பான வரிகளின் அதிகரிப்பு தொடர்பானது.
நாடாளுமன்ற அங்கீகாரம்
வரிகளை அதிகரிப்பதற்கான திருத்தம் (04.04.2023)ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தத் திருத்தம் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.
இரண்டாவது, மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவது தொடர்பானது.
பந்தயம் திருத்த யோசனையை போன்றே இந்த யோசனையும் (07.03.2023) ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது, ஆனால் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை.
உருவாக்கப்படாத வெளிப்படைத் தளம்
இதேவேளை மார்ச் 31 ஆம் திகதிக்குள் இணையத்தின் வெளிப்படைத்தன்மை தளத்தை நிறுவுவது தொடர்பான அதன் நிர்வாகக் கடமைகளில் ஒன்றை இலங்கை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது.
எனினும் இணையத்தின் வெளிப்படைத் தளம் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |