வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் நெருக்கடி - நாட்டை விட்டு வெளியேறும் மனநல மருத்துவர்கள்
மனநல நிபுணர்கள், குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை அதிகளவில் தேடுவதால், இலங்கையில் மனநல மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய மருத்துவமனையின் ஆலோசக மனநல மருத்துவர் சத்துரி சுரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுரவீர, மனநல சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாட்டில் தற்போது பணியாற்றும் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்
இலங்கையில் மனநல ஆலோசக மருத்துவர்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட சுமார் 100 முதல் 120 மனநல மருத்துவர்கள் உள்ளனர் என்றும், நிபுணர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதே இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மனநல சேவைகள் மீதான அழுத்தத்தைச் சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய மருத்துவமனை மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் உள்ள மருத்துவ நிலையங்கள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைத் தொடர்ந்து பெற்று வருவதாகப் பேரசிரியர் சுரவீர தெரிவித்துள்ளார்.
ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு