திலீப பீரிஸுக்கு வேண்டியபடி மடிக் கணினியின் கடவுச் சொல்லை கொடுக்க முடியாது:சரத் வீரசேகர ஆவேசம்!
உளவுத்துறை என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம்.பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு வேண்டியபடி மடிக் கணினியின் கடவுச் சொல்லை கொடுக்க முடியாது.
அதைக் கொடுப்பதென்றால் கொடுப்பதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. இதை பெரிதுபடுத்தி, அனைத்தையும் பகிரங்கப்படுத்தி கொடுத்தால், பின்னர் அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் யார் தருவார்கள் என முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.
வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது..
ஏழு விசாரணை ஆணைக்குழுக்கள்
சுரேஷ் சலே வெளிநாட்டிலிருந்து சதி செய்தார் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது இருந்தது நல்லாட்சி அரசாங்கம்தானே. கோட்டாபய அரசாங்கம் இல்லையே.
அப்படியிருக்கும்போது அது இயலாத விடயம் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் என்று மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே சொல்கிறார்கள். 24 மணி நேரத்திற்கு முன்பும் சொன்னார்கள்.
அன்று காலையிலும் சொன்னார்கள். அவற்றை தடுத்தது சலேவா? இல்லையே. சஹ்ரானின் (ISIS) பயங்கரவாத சித்தாந்தமே இதைச் செய்தது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏழு விசாரணைக் குழுக்கள் இருந்தன. ஜனாதிபதி ஆணைக்குழு, நாடாளுமன்ற தெரிவுக் குழு, துறைசார் மேற்பார்வைக் என ஏழு குழுக்கள் இருந்தன.
அவற்றில் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றே கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் சலேவைக் கைது செய்தார்கள்.மக்களின் கவனத்தை முற்றாக வேறு திசைக்கு திருப்புவதற்காகவே சலேவைக் கைது செய்தார்கள்.
கடவுச் சொல்லால் ஏற்படும் ஆபத்து
தடுப்புக்காவல் உத்தரவு (Detention Order) போட்டு இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.சுமார் ஒன்பது மாதங்கள் ஆகின்றன.
சலே ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள்.சலே ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கடவுச்சொல் கொடுக்க வேண்டியதில்லை.

வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும். மடிக்கணினியை உடைத்து அதற்குள் என்ன இருக்கிறது என்று எடுத்துப் பார்க்கட்டும் அப்படிச் செய்ய இவர்கள் பயப்படுகிறார்கள்.
சலேவை சும்மா தேவையில்லாமல் தான் இன்று தடுப்புக்காவல் உத்தரவு போட்டு இப்படி நடத்துகிறார்கள்.அவர்தான் தீவிரவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய விடயங்கள் குறித்து மிகவும் சிறப்பாகப் பணியாற்றிய முதன்மை உளவுத்துறை அதிகாரி ஆவார்.
அப்படியிருக்க அவரை இப்படி நடத்தும் போது மற்ற உளவுத்துறையினரின் மன தைரியம் பாதிக்கப்படலாம். அதாவது, ஒட்டுமொத்தமாக நமது உளவுத்துறை கட்டமைப்பு முடக்கப்பட்டால்,
மற்றொரு தாக்குதல் வருவதைத் தடுக்க முடியாது.இன்னொரு தாக்குதல் வந்தால், அதற்கு முழுப் பொறுப்பையும் இந்த அதிகாரிகள் உட்பட அரசாங்கமே ஏற்க வேண்டும்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan