நாடற்றவளாக மாறியுள்ளேன்..! புலம்பும் முன்னாள் அமைச்சர்
தாம் இப்பொழுது எந்தவொரு நாட்டுக்கும் சொந்தமில்லாத நாடற்றவளாக வாழ நேரிட்டுள்ளது என முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
தான் பிறந்த இலங்கை குடியுரிமையையும் பிரித்தானிய குடியுரிமையையும் இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு
போலி ஆவணங்களை சமர்ப்பித்து அடையாள அட்டை பெற்றுக் கொண்டதாக டயானா மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் சட்டத்தரணிகளின் ஆலோசனைப்படி இலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ததாக டயானா தெரிவித்துள்ளார்.
எனினும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு காரணமாக இந்த விண்ணப்பம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதனால் தற்பொழுது தாம் நாடாற்ற நிலையில் வாழ நேரிட்டுள்ளதாகவும் டயானா தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டம்
தனது முன்னாள் கணவர் பிரயோகித்த அழுத்தம் காரணமாக 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஐக்கிய மக்கள் சக்தியில் தமக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே தாம் அப்போதைய ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
you may like this..
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri