இலங்கை பஞ்ச மகா நெருக்கடிகளை சந்திக்கும்
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை பஞ்ச மகா நெருக்கடிகளை சந்திக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
வர போகும் இந்த நெருக்கடிகள் சம்பந்தமாக நான் தற்போது வெளியில் பேசாது, உள்ளே கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றேன்.
உள்ளே நடத்தப்படும் இந்த கலந்துரையாடலில் தேவையான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், வெளியில் பேச தயார்.
நாம் நெருக்கடியின் உச்சத்தில் இல்லை என சில எண்ணினாலும் அது உண்மையல்ல. மார்ச் மாதமளவில் இந்த நெருக்கடிகள் உச்சத்தை எட்டும். அந்த நெருக்கடிகள் அரசியலின் திசையை முடிவு செய்யும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan