இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை இன்று (24) மற்றும் நாளை (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேறொரு திகதி கிடைக்கும் சாத்தியம்
ஒரு மாணவர் ஒரே நாளில் இந்த இரண்டு பரீட்சைகளையும் எழுத வேண்டியிருந்தால், அவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர நடைமுறைப் பரீட்சைகளுக்கு வேறொரு திகதி கிடைக்கக்கூடும்.
மேலும், அறநெறிப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் தேர்வுக்காகப் பெறப்பட்ட சேர்க்கைப் படிவம் மற்றும் வழங்கப்பட்ட சேர்க்கைப் படிவம் அல்லது அதன் சான்றளிக்கப்பட்ட நகலை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு முன் சம்பந்தப்பட்ட கல்வி வலயத்தின் அழகியல் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
