இலங்கையின் மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கை
இலங்கையின் மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர் குமார ஜயக்கொடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உப மின்நிலைய ஆய்வு
தேசிய மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாடு மற்றும் செயல்திறன் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு உப மின்நிலையங்களை ஆய்வு செய்தபோது அவர் இந்த உத்தரவினை வழங்கினார்.
பத்தரமுல்லை மற்றும் கிரிந்திவெல உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய உப மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மின் திறன் அதிகரிப்பு
கிரிந்திவெல பரிமாற்ற நிலையம் மேல் மாகாண மின்சார பரிமாற்ற திறனை 500 மெகாவாட் அதிகரிக்கும், அதே நேரத்தில் புதிய உப மின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மின்சார திறனை 63 மெகாவோட் அதிகரிக்கும்.
மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு நம்பகத்தன்மையை மேம்படுத்தும், கூரை சூரிய மின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் மற்றும் எதிர்கால பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam