ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு
கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் Khaled Nasser Al Ameri இற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று(21) திருகோணமலையில் உள்ள சினமன்ட் ட்ரிங்கோ புளூ ஹோட்டலில் நடைபெற்றது.
பங்கேற்றவர்கள்
இதில் கிண்ணியா நகரசபை தவிசாளர் தலைமையிலான குழுவில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி மற்றும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் கிண்ணியா நகரசபை பிரதேசத்தில் நவீன வசதிகளுடனான நகர மண்டபம் அமைப்பதற்கான திட்ட முன் மொழிவுகள் சம்பந்தமாகவும், கடற்தொழிலாளர்களுக்கான இறங்கு துறை மற்றும் மீன் சந்தை வசதிகள் தொடர்பாகவும் அதன்மூலம் கிண்ணியா பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
அத்துடன் சுயதொழில் முயற்சிகள் மற்றும் கிண்ணியா பிரதேச எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




