குமார ஜயகொடி பதவிவிலக வேண்டும் என சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கோரிக்கை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலக வேண்டும் என சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, 2015ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ. 8 மில்லியன் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராவதை தொடர்ந்து, அவர் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
சர்ச்சைக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் குமார ஜயகொடிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளன.
நெருக்கமான வட்டாரங்கள் தகவல்
எனினும், ஜனாதிபதி, குமார ஜயகொடியை பதவி விலக வேண்டும் என இன்னும் கேட்கவில்லை. என்றாலும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் அவ்வாறு பதவி விலக எந்த திட்டமும் இல்லை என்று கூறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
