இஸ்ரேலுக்கு துரோகமிழைத்த அவுஸ்திரேலியா! இரு நாடுகளுக்கிடையே பதற்றம்
அவுஸ்திரேலியப் பிரதமர் அன்டணி அல்பானீஸ் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசியல்வாதி சிம்சா ரோத்மேன் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்ததையடுத்தே நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பலஸ்தீன அதிகாரசபையுடன் பணிபுரியும் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கான விசாக்களை இஸ்ரேல் இரத்து செய்துள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த பின்னரே இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
பலவீனமான அரசியல்வாதி
இவ்வாறிருக்க, இஸ்ரேலிய அரசியல்வாதி சிம்சா ரோத்மேன், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெறுப்பு மற்றும் பிரிவினையை பரப்புபவர்களை அவுஸ்திரேலியா உள்ளே அனுமதிக்காது என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இதற்கு பதிலளித்த பெஞ்சமின் நெதன்யாகு, அவுஸ்திரேலியப் பிரதமர் அன்டணி அல்பானீஸ் ஒரு பலவீனமான அரசியல்வாதி என தெரிவித்துள்ளார்.
அத்தகைய கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதில்லை என அன்டணி அல்பானீஸ் நெதன்யாகுவுக்கு பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
