சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலருக்கு திடீரென வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
வெளிநாட்டவர்களான 50 பேருக்கும்
சில மாகாணங்களில் மட்டுமே, அதுவும், மாகாண மற்றும் மாநகரசபை மட்டத்தில் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.
ஃபெடரல் மட்டத்தில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
இந்நிலையில், Jura மாகாணத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலருக்கு திடீரென வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
அந்தவகையில், Bern மாகாணத்திலிருந்த Moutier என்னும் மாநகரசபை, தற்போது Jura மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Jura மாகாணத்தில் மாகாண மற்றும் மாநகரசபை மட்டத்தில் வாக்களிக்கும் உரிமை வெளிநாட்டவர்களுக்கு உண்டு.
ஆகவே, Moutier மாநகரசபை தற்போது Jura மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அம்மாகாணத்துக்கு புதிதாக 1,000 வாக்காளர்கள் கிடைத்துள்ளார்கள்.
அவர்களில் வெளிநாட்டவர்களான 50 பேருக்கும் தற்போது வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
