மின்கட்டணம் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டால் இதுவே நடக்கும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேர்தலை இலக்காகக் கொண்டு பாரியளவில் மின் கட்டணம் குறைக்கப்பட்டால், மின்சார சபையை தொடர்வது கடினமாகும் என மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும், என்றாலும் தேவையில்லாமல் குறைக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய நூலக சேவைகள் மற்றும் ஆவணப்படுத்தல் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நட்டம் ஏற்படுமென எச்சரிக்கை
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களில் மின்சார வாரியம் ஓரளவு இலாபம் ஈட்டினால், அடுத்த ஆறு மாதங்களுக்கும் நுகர்வோர் பலனைப் பெற வேண்டும். எனினும், வாரியத்தின் தற்போதைய நிலை இலாபம் ஈட்டும் அமைப்பல்ல.
எதிர்காலத் தேர்தலையோ அல்லது வேறு ஏதேனும் நம்பிக்கையையோ இலக்காகக் கொண்டு 50% மின் கட்டணத்தை குறைப்பதால் சபைக்கு நட்டம் ஏற்படும்.
அத்துடன் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது குறித்து சிந்தித்து சரியானதைச் செய்யும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
