இலங்கைக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல்
இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இந்த நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய, இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக எதிர்வரும் 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திவால் நிலை
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மூன்றாவது கடன் தொகை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய வாங்குரோத்து நிலையை இல்லாமல் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam