மின்கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றால் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இன்றைய (24.11.2023) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீர் மின்சாரம் உற்பத்தி
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை செலுத்துவதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது முழு திறனையும் உபயோகித்து தற்பொழுது நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஆனாலும் திடீரென விலையை குறைக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரணம் வழங்கப்படுமாயின் அதனை அமைச்சரவைக்கு அறிவித்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
