மீண்டும் வழமைக்கு திரும்பும் மலையக தொடருந்து சேவைகள்
நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொடருந்து பாதையில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமையினால் மலையக தொடருந்து சேவையானது நேற்று (23.11.2023) நானுஓயா வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.
தொடருந்து சேவை
இந்த நிலையில், பதுளை தொடருந்து நிலையத்தில் ஆரம்பமாகும் அனைத்து தொடருந்துகளும் நானுஓயா தொடருந்து நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தொடருந்து பாதையில் சரிந்த மண்மேடு மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
