நாடாளுமன்றத்தை கலைத்தால் ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு வேறு வழியில்லை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் அதாவது செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நிச்சயமாக நடைபெறும்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தலை நடத்த முடியாது என நாங்கள் தெரிவிக்க முடியாது. அதனை நடத்தவேண்டும்.
ஒரு சில மாதங்களிற்குள் இரண்டு தேர்தல்களை நடத்துவதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற கேள்விக்கு பிரச்சினைகள் காணப்பட்டாலும் நாங்கள் உரிய விதத்தில் நாங்கள் அவற்றைகையாண்டு தேர்தலை நடத்தவேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எந்த தாக்கமும் ஏற்படாது. அது உரியநேரத்தில் இடம்பெறும்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் நடைபெறும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |