துன்பத்தில் வாடும் மக்கள் உள்ள நாட்டில் இலங்கை முன்னிலை! சரத் பொன்சேகாவின் வெளிப்படுத்தல்
இலங்கையை 75 வருடங்களாக நிர்வகித்தவர்களின் அசமந்தப்போக்கு காரணமாக நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், துன்பத்தில் வாடும் மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
தற்போதைய அரசாங்கம்
நாடு சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து ஆட்சி புரிந்த எந்தவொரு தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான நோக்கு இருக்கவில்லை.

மேலும், நாட்டை ஆட்சி புரிந்த தலைவர்களை வருடா வருடம் நினைவு கூர்ந்து கொண்டாடினாலும் அவர்கள் நாட்டை சரியான பாதையில் நகர்த்தவில்லை.
எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam