ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.6 வீதமாக வீழ்ச்சி
இந்த ஆண்டின் (2022) முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2021 முதல் காலாண்டில் பதிவான 4.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 3,519,921 மில்லியன் ரூபாவிலிருந்து 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,463,101 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விவசாய மற்றும் தொழில்துறை துறைகளின் வளர்ச்சி விகிதம் முறையே 6.8 சதவிகிதம் மற்றும் 4.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சேவைத் துறையில் சிறிய வளர்ச்சி
எனினும், சேவைத் துறை 0.7 சதவிகிதம் என்ற சிறிய வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பின்தங்கியிருந்த பொருளாதார செயற்பாடுகளை மீளப்பெறும் நோக்கில் இலங்கையின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டின் முன்னோக்கி நகர்கிறது.
எனினும், துரதிஷ்டவசமாக பணவீக்கம், ரூபாய், டாலர் மதிப்பு சரிவு பற்றாக்குறை, வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருமானம் குறைதல் போன்ற வலுவான தாக்கம் காரணமாக, இந்த காலாண்டில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யத் தவறியதாக திணைக்களம் மேலும் கூறியுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
