கட்டுநாயக்க விமான நிலையத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், இந்த நடவடிக்கைகளால் சாதாரண பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய விமான நிலையத்திற்கு செல்லும் அரசியல்வாதிகள் அல்லது பிரபுக்கள் நீண்ட நேரம் விமானங்களுக்கு காத்திருந்தாலும் உணவு நீர் எதுவும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
