பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக கடல் வழியாக இவ்வாறு தப்பி செல்வது இலகுவாக இடம்பெறுவதனால் பல கடல் எல்லைகளில் கடற்படையினர் நீண்ட காலமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலத்தில் வட மாகாணத்தை சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
