கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க விமான நிலையம் வழமை போன்று செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் இன்று நாடு பூராகவும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று கடமைக்காக வந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக் குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இன்று வழமையாக இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan