கூலி வேலை செய்யும் மக்களின் நிலை கடும் மோசம்! செல்வம் அடைக்கலநாதன்
பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பட்டினி சாவினை தவிர்க்க முடியாது
விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.
இனிவரும் காலங்களில் பட்டினிசாவுகள் வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது.

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது.
அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம்.
பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுப்பதன் ஊடாக நெல் உற்பத்தி பெருகும்.
அதேபோல் தோட்டங்களை செய்கின்ற போது மரக்கறிகளை செய்கின்ற வாய்ப்புக்களும் ஏற்படும்.

அரசாங்கம் பசளையை விவசாயிகளுக்கு இறக்கி கொடுப்பதன் ஊடாக தான் பட்டினியில் இருந்து மக்களை மீட்க முடியும்.
இந்திய பிரதமர் இவ் விடயத்திலே கவனம் செலுத்தி உடனடியாக பசளையை தந்துதவுமாறு கேட்டிருக்கின்றேன்.
பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது
பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை
என மேலும் தெரிவித்தார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri