தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஓயாத அலைகளை' நினைவுபடுத்திய கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்! ஆங்கில ஊடகத்தின் வர்ணிப்பு
அரசாங்கத்துக்கு எதிராக நேற்று இடம்பெற்ற வெகுசன போராட்டங்கள், 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த, 'ஓயாத அலைகள்' நடவடிக்கையை நினைவுப்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அன்று ஓயாத அலைகள் தாக்குதலே, அரசாங்கப் படைகள் மீதான அவர்களின் இறுதித் தாக்குதலாக கருதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
எனினும் நேற்றைய போராட்டத்தின்போது படையினரின் செயல்படாத நிலையை அடுத்து வன்முறைகள் காரணமாக, நாடு அராஜகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
வெகுஜன கிளர்ச்சி மாத்திரம் தீர்வு இல்ல
இந்தநிலையில் ஒரு வாரமே பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர், பிரதமரை, நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தமையானது, அரசாங்கம் அதன் அத்தியாயத்தில் இருந்தது என்பதற்கான அறிகுறியாகவே இருந்ததாக ஆசிரியர் தெரிவிக்கிறார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பல தசாப்த கால கோரிக்கையை புறக்கணித்து, அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இந்த நாட்டை தற்போது இருக்கும் பொருளாதார பாதாளத்திற்கு இழுத்துச் சென்றதன் விளைவையே நேற்றைய போராட்டம் மூலம் பார்க்கமுடிந்தது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் நிலையும் குழப்பத்தை மோசமாக்குகிறது. எவ்வாறாயினும், ஏற்கனவே பொருளாதார ஸ்திரமின்மையால் சிதைக்கப்பட்ட நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு நேற்றைய வெகுஜன கிளர்ச்சி மாத்திரம் தீர்வு அல்ல. பொதுமக்களின் பொறுமை குறுகி வருகிறது.
எனினும் சகிப்புத்தன்மை மட்டுமே நாட்டை
ஒன்றாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்றும் ஆங்கில ஊடகத்தின் ஆசிரியர்
தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.