ஜனாதிபதி வீட்டில் IMF விவாதத்தை நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்(Video)
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேற்றைய தினம் நடத்தப்பட்ட போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டாக நேற்றைய போராட்டம் அமைந்திருந்தது.
இதன் எதிரொலியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ளார், அதனைத் தொடர்ந்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
அத்துடன், நேற்று மாலையில் இருந்து அமைச்சர்கள் பலர் பதவி விலக ஆரம்பித்துவிட்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்களின் செயற்பாடு
இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை உடைத்துக் கொண்டு ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்தனர்.
அத்தோடு ஜனாதிபதி செயலகத்தையும் தனது ஆக்கிரமிப்பிற்குள் போராட்டகாரர்கள்கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அரியல் ரீதியான பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் செய்த சில வேடிக்கையான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றன.
நீச்சல் குளத்தில் குளித்தமை, உணவு சமைத்து உண்டமை என பல விடயங்கள் வைரலாகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் விசேட விவாதம் ஒன்று நடத்தப்பட்டது.
அதில் போராட்டகாரர்கள் இணைந்து ஐஎம்எப் அதிகாரிகளுடன் விவாதம் நடத்துவது போன்ற வேடிக்கையான விவாதங்களும் காணொளியாக வெளியாகியுள்ளன.