அடுத்த இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! பிரதமர் தகவல்
2027 இற்குள் பொருளாதாரம் நூற்றுக்கு ஐந்து வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' உள்நாட்டு விலை ஸ்த்திரத் தன்மையை அடைதல் மற்றும் அதனை பேணுதல் ஆகிய பொறுப்புக்கள் சட்டபூர்வ நிறுவனமான மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கியின் செயற்பாடுகள்
மத்திய வாங்கினால் மேற்கொள்ளப்படும் நிதியியல் கொள்கை நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டின் வட்டி வீதங்கள் தொடர்பான அதிகமான தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இலங்கை மத்திய வங்கி ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளை மீட்டெடுக்கும் நிலையை அடையும் நோக்கில் 2023 ஜூன் மாதத்தில் இருந்து தளர்வான நிதிக் கொள்கைகளைப் பின்பற்றியது. அதன்படி வரலாற்றில் இடம்பெற்ற சாதாரண பொருளாதார நிலைமையை நெருங்கி வருகின்றது.
சந்தையின் வட்டி வீதம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறைவை வெளிப்படுத்தி சாதாரண நிலைமைக்கு வந்துள்ளது. 2027 இற்குள் பொருளாதாரம் நூற்றுக்கு ஐந்து வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை வட்டி வீதம் குறைவடைவதனால் நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு விசேடமாக வட்டி வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் மக்களையும் பாதிக்கின்றது.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டின் வட்டி வீதம் பொருளாதாரக் காரணிகள் பலவற்றின் கூட்டினால் தீர்மானிக்கப்படும்.
கடன் பிரச்சினை
தற்போது எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக உள்ள ஒரே வழி ஏற்றுமதியை அதிகரித்தல் மட்டுமல்ல.
வெளிநாட்டு அந்நிய செலாவணியை உழைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஏனைய மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவசியமான ஒதுக்கீட்டை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் ஏற்படும் தாமதம் தொடர்பான சிக்கல்களுக்கு முறையானதாக அரசாங்கத்தினால் பின்வரும் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.'' என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri
