தென்னிந்திய நடிகரின் கடிதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் பதில்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சே.லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி) இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் “ உதவும் மனிதம் அறக்கட்டளை” யின் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உதவும் மனிதம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக மக்களிடத்து ஒவ்வொருவரிடமும் வீட்டு சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், உழுந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தின் சார்பில் பெற்று எம் சக இலங்கை உறவுகளுக்கு கப்பல் மூலமாக கொண்டு வர முயற்சி செய்ய இருக்கின்றோம்.
அங்கு நாங்கள் நேரடியாக வந்து மக்களுக்கு இந்த உதவியை செய்திட இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று தர வேண்டும்.
இந்தியா சகோதரர் நாடு என வெறும் வார்த்தைக்கு மட்டும் சொல்பவர்கள் இல்லை என்று இல்லாமல் உயிர்ப்போடு உடன்பிறந்த எம் சகோதர சகோதரிகளுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் உங்கள் உதவியை நாடியுள்ளோம் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா பதில் கடிதம்

குறித்த கடிதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு 'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை அகம் மகிழ்ந்து வரவேற்கின்றேன்.
தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கின்றது.
நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் 'உதவும் மனிதம்' வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே, நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ, தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ நாம் ஒரு போதும் இழந்துவிட முடியாதவர்கள்.
பேசும் மொழியாலும் கலை கலாச்சார பண்பாட்டு உணர்வுகளாலும் இணையும் எங்கள் உறவுகள் நீடித்து வளரட்டும். உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம் கொண்டு வர நான் ஆவன செய்கிறேன்.
ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன். என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri