இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்திற்கு ரணிலின் சரியான திட்டம்
ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டம், நாட்டின் பொருளாதார சீரமைப்பு ஏற்ற வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
ஜனாதிபதி முன்வைத்த பொருளாதாரக் கொள்கையில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தான் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரணிலின் பொருளாதார திட்டம்
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹர்ஷ டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் நம்பும் அதே சீர்திருத்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் நம்மால் ஒத்துக்கொள்ள முடியாததற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
ஹர்ச பாராட்டு
பொருளாதார ரீதியாக, வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன. பொதுவாக, குறைந்த வருமானம் பெறுவோருக்குப் போதிய நிவாரணம் வழங்காமை, பின்னர் இந்தப் பிற்போக்கு வரிகள் எனப் பொருளாதார ரீதியாகப் பல பிரச்சினைகள் உள்ளன.
அதையும் தாண்டி எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. எனினும் இந்த வரவு செலவு திட்டத்தில் ஊழல் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்