இலங்கையில் வற் வரியை அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை
இலங்கையில் பொருட்கள் சேவைகள் மீதான வற் வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கம் வற் வரியை எட்டு வீதமாக குறைந்தமையினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளதாக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாளாந்த அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் 4 பில்லியன் டொலர்கள் தேவை.
வரியை உயர்த்த வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் வற் வரியை 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கோட்டாபய ராஜபக்ஷ, 15 வீதமாக இருந்த வற் வரியை 8 வீதமாக குறைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.