அலரி மாளிகையின் முன் நடந்த குழப்பம் தொடர்பில் பொலிஸார் தகவல்
அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் தாக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அங்கு தற்காப்புக்காகவே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் வாகனங்களில் போடப்பட்டிருந்த தடைகளை அகற்ற பொலிஸாருக்கு போராட்டக்காரர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கை ஒன்றே மேற்கொள்ளப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.